தற்போதைய செய்திகள்

21 விளையாட்டு செயலிகள் பாதுகாப்பற்றவை : அவாஸ்ட் நிறுவனம்

26th Oct 2020 04:36 PM

ADVERTISEMENT

கூகுள் ப்ளேஸ்டோரில் உள்ள 21 விளையாட்டு செயலிகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக அவாஸ்ட் நிறுவனம் கூகுள் நிறுவனத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.

கூகுள் ப்ளேஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகளில் 21 விளையாட்டு செயலிகளில் ‘ஆட்வேர்’ உள்ளதாக குற்றச்சாட்டு அவாஸ்ட் நிறுவன பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த அறிக்கையை சமந்தப்பட்ட செயலி நிறுவனங்களுக்கும், கூகுள் நிறுவனத்திற்கும் அனுப்பியுள்ளார்கள். அந்த அறிக்கையை கூகுள் நிறுவனம் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.

ஆட்வேர் எனப்படுவது செயலி நிறுவனங்களின் அனுமதி இல்லாமல் வெளியிடப்படும் விளம்பரம் ஆகும், உதாரணமாக நாம் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும் போது அனைத்திற்கும் அனுமதி அளிப்போம், அப்போது நம்மை அறியாமலேயே ஆட்வேருக்கு அனுமதி அளித்துவிடுவோம், இதன்மூலம் நாம் செயலியை உபயோகிக்கும் போது தொடர்ந்து விளம்பரங்கள் வந்து கொண்டி இருக்கும்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவாஸ்ட் நிறுவன ஆய்வாளர் ஜாகுப் வவ்ரா வெளியிட்ட அறிக்கையில்,

பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் செயலிகளைப் பதிவிறக்கும் போது விழிப்புடன் இருக்க வேண்டும், மேலும் பயன்பாடுகளின் சுயவிவரம், மதிப்புரைகளை சரிபார்க்கவும், விரிவான சாதன அனுமதி கோரிக்கைகளை கவனத்தில் கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.

இந்த 21 செயலிகளை, இதுவரை குறைந்தது 80 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவாஸ்ட் வெளியிட்ட செயலிகளில் சூட் தெம், க்ரஷ் கார், ரோலிங் ஸ்க்ரோல், ஹெலிகாப்டர் அட்டெக் - நியூ, அஸாஸின் லெஜண்ட் - 2020 நியூ, ஹெலிகாப்டர் ஷூட், ரக்பி பாஸ், ஃப்லையிங் ஸ்கேட்போர்டு மற்றும் அயர்ன் ஆகியவை உள்ளன.

Tags : software
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT