தற்போதைய செய்திகள்

பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி

24th Oct 2020 11:45 PM

ADVERTISEMENT

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.

முதல் பேட்டிங் குறித்த முழு விவரங்களுக்கு : கிளிக் செய்யவும்

127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை எதிர்கொண்டு ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் - பேர்ஸ்டோவ் ஜோடி அதிரடி தொடக்கம் தந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் 7வது ஓவரில் வார்னர் 35 ரன்களிலும், 8வது ஓவரில் பேர்ஸ்டோவ் 19 ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய அப்துல் சமத் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின் ஜோடி சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் மணீஷ் பாண்டே சற்று பொறுமையாக ரன்களை சேர்த்து அணியின் வெற்றிக்கு அருகில் சென்றபோது 17வது ஓவரில் மணீஷ் 15, ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரிலேயே விஜய் சங்கரும் 26 ரன்களுக்கு வெளியேறினார்.

ஜோர்டன் வீசிய 19 வது ஓவரில் ஹோல்டர்(5), ரஷித் கான்(0) அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆட்டம் பஞ்சாப் அணி பக்கம் திரும்பியது.

பரப்பரப்பான ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசிய முருகன் அஸ்வினின் 2வது பந்தில் சந்தீப்(0), 3வது பந்தில் கார்க் (3) அடுத்தடுத்து அவுட்டாக, 5வது பந்தில் கலீல் ரன் அவுட்டானார். 

இதன்மூலம், 10 விக்கெட்டையும் கைப்பற்றி 12 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு பந்து மீதி இருக்கும் நிலையில் பஞ்சாப் அணி த்ரில் வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணி சார்பில் ஜோர்டன் மற்றும் அர்ஸ்திப் சிங் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்கள்

Tags : IPL 2020
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT