தற்போதைய செய்திகள்

ஆப்கனில் கடந்த மாதத்தில் தலிபான்கள் தாக்குதலில் 180 பேர் பலி

IANS

ஆப்கானிஸ்தானில் கடந்த மாதத்தில் தலிபான்கள் நடத்திய பல்வேறு தாக்குதலில் 180 பேர் பலியானதாகவும், 375 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியாக தலிபான்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.

இதனிடையே ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தலுபான்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது, இருப்பினும் இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

சமீபத்தில், செவ்வாயன்று ஜால்ரெஸ் மாவட்டத்தில் நடந்த இரண்டு சாலையோர குண்டுவெடிப்பில் குறைந்தது ஐந்து பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 9 பேர் காயமடைந்தனர். திங்களன்று, லோகர் மாகாணத்தில் ஒரு மாவட்ட ஆளுநர் தலிபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT