தற்போதைய செய்திகள்

மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவர் மாருதி மன்படே கரோனாவால் காலமானார்

20th Oct 2020 05:59 PM

ADVERTISEMENT

கரோனாவால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாருதி மன்படே செவ்வாய்க்கிழமை மகாராஷ்டிர சோலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார் .

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மாருதி மன்படே (வயது 65)  தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாருதி சோலாப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை பிற்பகல் காலமானார்.

ADVERTISEMENT

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இவர், கர்நாடக விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் நலனுக்காகப் போராடியதற்காக அறியப்பட்டார். கரோனா காலங்களில் கூட, ஏழை மற்றும் ஏழைகளின் துன்பங்களை முன்னிலைப்படுத்த மான்பேட் போராடி வந்தார்.

மாருதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கர்நாடக துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயண் கூறியதாவது,

தலித்துகள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குரலாக திகழ்ந்த மாருதி கரோனாவால் உயிரிழந்ததை அறிந்து வருத்தம் அடைந்ததாக தெரிவித்தார்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT