தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி

19th Oct 2020 03:07 PM

ADVERTISEMENT

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திங்கள்கிழமை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

பஞ்சாப் மாகாணம் ஒகாரா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை திங்கள்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி பலியாகினர், மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்தவுடன் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

ADVERTISEMENT

மேலும், வீட்டின் மேற்குரை பாழடைந்த நிலையில் விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறினார்.

Tags : Pakistan
ADVERTISEMENT
ADVERTISEMENT