தற்போதைய செய்திகள்

மே 25 முதல் உள்நாட்டு விமானங்களில் 1.39 கோடி பேர் பயணம் : மத்திய அமைச்சர்

19th Oct 2020 06:22 PM

ADVERTISEMENT

கரோனா கட்டுபாடுகளுக்கு பின் கடந்த மே 25 முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 1.39 கோடியாக உயர்ந்துள்ளது என திங்கள்கிழமை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் கூறுகையில்,

அக்டோபர் 18ஆம் தேதி புதிய உட்சமாக, 1,581 உள்நாட்டு விமானங்களில் 1,80,838 பயணிகள் பயணம் செய்துள்ளதாகவும், இதன்மூலம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 3,63,757 ஆக இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதன்மூலம், கடந்த மே 25 முதல் உள்நாட்டு விமானங்களில் 1.39 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக கூறினார்.

ADVERTISEMENT

மேலும்,  வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 22 லட்சம் மக்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், இந்தியாவில் இருந்து சொந்த நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

உள்நாட்டு விமான சேவையில், தற்போது நாளொன்றுக்கு 2 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர், இந்த மாத இறுதியில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, 3 லட்சமாக உயரும் என தெரிவித்தார்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT