தற்போதைய செய்திகள்

நீதிமன்றங்கள் ஆன்லைன் விசாரணை நடத்த கூடுதலாக 1,500 உரிமங்கள்

19th Oct 2020 03:39 PM

ADVERTISEMENT

நீதிமன்றங்கள் காணொலி மூலம் விசாரணைகளை நடத்த ரூ. 9 கோடி செலவில் கூடுதலாக 1,500 உரிமங்களை வாங்க அரசு தரப்பில் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த வாரம் மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, கரோனா காரணமாக பொதுமுடக்கம் அறிவித்த மார்ச் 24 முதல் செப்டம்பர் 31 வரை, இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களால் 26 லட்சம் வழக்குகளை விசாரித்து உள்ளன.

அதில், 25 உயர்நீதிமன்றங்களில் 6,88,318 வழக்குகளும், 19 ஆயிரம் மாவட்ட நீதிமன்றங்களில் 19,33,492 வழக்குகளும் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டுள்ளது. 
 
காணொலி விசாரணையானது, விரைவில் விசாரிக்கப்பட்டு நீதி வழங்க உதவியாக உள்ளதால், கரோனா தொற்று முடிந்த பிறகும் இந்த முறையானது தொடர வாய்ப்புள்ளது.

இந்த காணொலி விசாரணை நடத்த உதவும் மென்பொருளை 150 பேர் கொண்ட குழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதன் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.

ADVERTISEMENT

இதையடுத்து, மாவட்ட மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக 1,500 உரிமங்களை வாங்க அரசு தரப்பில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி தெரிவித்தார்.

Tags : Court
ADVERTISEMENT
ADVERTISEMENT