தற்போதைய செய்திகள்

காஷ்மீரில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காணவில்லை

14th Oct 2020 02:55 PM

ADVERTISEMENT

மத்திய காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தின் சடூரா பகுதியில் சில ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் உள்பட இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காணவில்லை என புதன்கிழமை தெரிவித்தனர். 

சடூராவில் உள்ள ஒரு சிறப்பு பாதுகாப்புப் படையின் குழுவின் முகாமில் இருந்து அல்தாஃப் உசேன் என்ற பாதுகாப்புப் படை வீரர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், முகாமில் இருந்து இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள் மற்றும் மூன்று கைத்துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளது, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில், எஸ்.எஸ்.பி. படையின் ஒரு காவலர், சடூராவுக்கு அருகிலுள்ள நாகம் பகுதியில் உள்ள முகாமில் இருந்து காணாமல் போயுள்ளார்.

ADVERTISEMENT

எஸ்.எஸ்.பி முகாமில் இருந்து ஐ.என்.எஸ்.ஏ.எஸ் ரக துப்பாக்கி மற்றும் 20 குண்டுகள் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : jammu kashmir defence
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT