தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் பெய்த கனமழையால் 10 பேர் பலி

14th Oct 2020 04:29 PM

ADVERTISEMENT

வங்காள விரிகுடாவில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரத்தில் கடந்த 2 நாளாக பெய்த கனமழையால் 10 பேர் பலியானதாக புதன்கிழமை அரசு தெரிவித்துள்ளது. 

விசாகப்பட்டினம், கிழக்கு கோதாவரி, கிருஷ்ணா மாவட்டங்களில் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் துணை மின்நிலையங்கள் சேதமடைந்ததால் மின்சார விநியோகம் தடைபட்டது.

கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யட்டிருந்த பயிா்கள் நீரில் மூழ்கின. அந்த மாவட்டங்களில் சில குடிசை வீடுகள் இடிந்து விழுந்தன. நூற்றுக்கணக்கான வீடுகளை மழைநீா் சூழ்ந்தது.

கிழக்கு கோதாவரி, விசாகப்பட்டினம், மேற்கு கோதாவரி மாவட்டங்களில் உள்ள நீா்த்தேக்கங்கள் நிரம்பின.

ADVERTISEMENT

இதுகுறித்து உயர்மட்ட குழுவின் ஆலோசனையில் பங்கேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த இரண்டு நாள்களில் மாநிலம் முழுவதும் பெய்த கனமழையால் 10 பேர் பலியானதாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.

மேலும், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் பேசிய முதல்வர், ஆற்றின் கரையோர பகுதியில் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் உத்தரவிட்டார்.

Tags : Andhra Pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT