தற்போதைய செய்திகள்

பஞ்சாபில் ஒரு லட்சம் அரசுப் பணி : அமைச்சரவை ஒப்புதல்

14th Oct 2020 04:46 PM

ADVERTISEMENT

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் 2020க்குள் ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்ததையடுத்து, அத்திட்டத்திற்கு அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், 2022 மார்ச் மாதத்திற்குள் ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்குவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதையடுத்து பஞ்சாப் அமைச்சரவை மாநில வேலைவாய்ப்பு திட்டம் 2020-22 திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

காலியாக உள்ள அரசு பணியிடங்களை குறிப்பிட்ட இடைவெளியில் நிரப்பப்படும் என கூறியுள்ளனர். முதற்கட்டமாக, 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்குள் 50 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags : employment punjab
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT