தற்போதைய செய்திகள்

தில்லி கேட் அருகே வெடி விபத்து: பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

14th Oct 2020 03:42 PM

ADVERTISEMENT

தில்லி கேட் அருகே அலிகர் பகுதியில் செவ்வாய்க்கிழமை தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

தில்லி கேட் அருகே அலிகர் பகுதியில் பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் செவ்வாய்க்கிழமை எரிவாயு உருலை வெடித்து சிதறியது, இதில் அருகில் இருந்த பல வீடுகள் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 50 ஆண்டுகளாக பொம்மை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்த சகோதரர்கள் மனோஜ் (38) மற்றும் விஷால் (32) ஆகியோர் பலியாகினர்.

மேலும் பங்கஜ் (30) மற்றும் அபிஷேக் (26) ஆகியோரும் பலியாகினர், 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படைகள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

விபத்து குறித்து பேசிய மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி விவேக் ஷர்மா, இது பொம்மை துப்பாக்கி தயாரிக்கும் நிறுவனம், பண்டிகை காலம் வருவதால் பெருமளவு சேமித்து வைத்திருக்கலாம். இந்த தொழிற்சாலைகளில் ஹைட்ராலிக் இயந்திரம் இருந்துள்ளது. இதுபோன்ற இயந்திரத்தில் அதிகம் எரியக்கூடிய எண்ணெய் இருக்கும். மீட்புப் பணிகள் முடிந்தவுடன் முழுமையான விசாரணை தொடங்கும் என தெரிவித்தார்.

Tags : blast explosion
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT