தற்போதைய செய்திகள்

கம்போடியாவில் கனமழை: 12 பேர் பலி; 10 ஆயிரம் பேர் வெளியேற்றம்

14th Oct 2020 03:59 PM

ADVERTISEMENT

கம்போடியா நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக 12 பேர் உயிரிழந்தனர். தாழ்வான பகுதிகளில் இருந்த 10 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கம்போடியாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழையின் காரணமாக 25 மாகாணங்களில் 19 மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக சாலைகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.  கனமழையால் 1.4 லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 500க்கும் அதிகமான குடும்பங்கள் தலைநகரான போம் பின் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்ததாகவும், அடுத்த வாரம் வரை கனமழை தொடரும் என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை செய்தித்தொடர்பாளர் குன் ஷோகா தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

Tags : Cambodia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT