தற்போதைய செய்திகள்

கேரளத்தில் மேலும் ஒரு அமைச்சருக்கு கரோனா

7th Oct 2020 06:24 PM

ADVERTISEMENT

கேரள மின்சாரத் துறை அமைச்சர் எம்.எம்.மணிக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து முகநூலில் எம்.எம்.மணி (வயது 75) வெளியிட்ட பதிவில்,

இன்று எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

இதற்கு முன்னதாக, கேரள அமைச்சர்களில் தாமஸ் ஐசக் (நிதித்துறை), ஈ பி ஜெயராஜன் (தொழில் துறை) மற்றும் வி எஸ் சுனில் குமார் (வேளாண் துறை) ஆகிய மூவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு, அதிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT