தற்போதைய செய்திகள்

காஷ்மீரில் மரத்தில் இருந்து விழுந்த முதியவர் பலி

7th Oct 2020 04:44 PM

ADVERTISEMENT

மத்திய காஷ்மீர் மாவட்டம் காண்டர்பால் பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து 60 வயது முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

காண்டர்பால் பகுதியில் அப்துல் ரஹ்மான் தனது தோட்டத்தில் மரத்தின் கிளைகளை வெட்டிக்கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இருப்பினும், காவல்துறையினார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : Kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT