தற்போதைய செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் கரோனாவில் இருந்து மீண்டார்

7th Oct 2020 08:30 PM

ADVERTISEMENT

ஒடிசாவில் சுதந்தரப் போராட்ட வீரர் கரோனாவில் இருந்து மீண்டு புதன்கிழமை வீடு திரும்பியுள்ளார்.

ஒடிசாவில் 96 வயதுடைய இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் லோக்நாத் நாயக் என்பவர் வசித்து வருகிறார். அவரது இளம் வயதில் சுதந்திர இயக்கத்தில் பங்கேற்று, பின் அரசாங்க அதிகாரியாகவும் இருந்து ஓய்வு பெற்றார்.

இவர் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி கரோனாவால் பாதிக்கப்பட்டு எஸ்யூஎம் கரோனா சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இவர் காய்ச்சல், சுவாசப் பிரச்னை, சிறுநீரக நோய் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நோயில் இருந்து மீண்டு புதன்கிழமை வீடு திரும்பினார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் பெற்ற சிகிச்சை எனது எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் என்னை மிகவும் அக்கறையுடனும் பணிவுடனும் நடத்தினார்கள். நான் அவர்களுக்கு நன்றிக் கடன் பெற்றுள்ளேன் என்று நாயக் கூறினார்.

Tags : freedom fighter coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT