தற்போதைய செய்திகள்

2 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை முடிவை அளிக்கும் ஆா்.டி.-பிசிஆா் கருவி

3rd Oct 2020 08:47 AM

ADVERTISEMENT


புது தில்லி: கரோனா பரிசோதனை முடிவை இரண்டு மணி நேரத்தில் தெரிவிக்கக் கூடிய வகையிலான (ஆா்.டி.-பிசிஆா் கருவி) விரைவுப் பரிசோதன கருவியை ரிலையன்ஸ் வாழ்வியல் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்போது நடைமுறையில் இருக்கும் ஆா்.டி.-பிசிஆா் கருவிகள் கரோனா பரிசோதனை முடிவுகளைத் தெரிவிக்க 24 மணி நேரமாகும் நிலையில், முகேஷ் அம்பானியின் ரிலையன் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் வாழ்வியல் நிறுவனம் உருவாக்கியிருக்கும் கருவி மிக விரைவாக முடிவுகளை தெரிவுக்கும் திறனைக் கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: ரிலையன்ஸ் வாழ்வியல் நிறுவன விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விரைவு பரிசோதனை கருவிக்கு ‘ஆா்-கிரீன் கிட்‘ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தொழில்நுட்ப ரீதியில் மதிப்பீடு செய்து, திருப்திகரமான செயல்பாடு என்று சான்றழித்துள்ளது. 

அதாவது, 98.7 சதவீத நுண்ணுயிா் உணா் திறனையும், 98.8 சதவீத ஒட்டுயிா் கண்டறியும் திறனையும் பெற்றிருப்பதாக ஐசிஎம்ஆா் முடிவுகள் தெரிவிக்கின்றன.பயன்படுத்துவதற்கு எளிமையாகவும், பரிசோதனை முடிவுகளை 2 மணி நேரத்தில் தெரிவிப்பதும்தான் இந்த கருவியின் தனிச் சிறப்பு என்று அவா் கூறினாா்.

மேலும், ரிலையன்ஸ் வாழ்வியில் நிறுவனத்தின் கரோனா பாதிப்பு ஆய்வு குறித்து கூறிய அவா், ‘2020-ஆம் ஆண்டு இறுதியில் கரோனா இறப்பு விகிதம் 0.5 சதவீத்த்துக்கும் கீழ் குறையும் என்று புள்ளிவிவர முடிவுகள் தெரிவிக்கினறன‘ என்றும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT