தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 6 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

1st Oct 2020 06:26 PM

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,688 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 5,688 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1289 பேர் புதிதாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,03,290 ஆக உயர்ந்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் மேலும் 66 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,586 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் ஒரேநாளில் 5,516 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,47,335 பேர் குணமடைந்துள்ளனர். 46,369 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 87,647 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 74,41,697 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 121 என மொத்தம் 187 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT