தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் புதிதாக 16,476 பேருக்கு கரோனா

1st Oct 2020 10:11 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 16,476 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக  16,476 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 14,00,922 ஆக உயர்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 394 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 37,056 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

இன்று ஒரே நாளில் 16,104 பேர் தொற்றில் இருந்து குணமடைந்ததை அடுத்து மொத்தம் எண்ணிக்கை 11,04,426 ஆக உள்ளது. தற்போது 2,59,006 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT