தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் 6,751, கர்நாடகத்தில் 10,070 பேருக்கு கரோனா

1st Oct 2020 10:03 PM

ADVERTISEMENT

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன.

ஆந்திரம்:

ஆந்திரத்தில் புதிதாக 6,751 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 7,00,235 ஆக உயர்ந்துள்ளது. இதில் 57,858 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6,36,508 பேர் குணமடைந்துள்ளனர், 5,869 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகம்:

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,070 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 130 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 6,11,837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,92,412 பேர் குணமடைந்துள்ளனர், 8,994 பேர் பலியாகியுள்ளனர். 1,10,412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT