தற்போதைய செய்திகள்

‘விவசாயிகளைத் தூண்டிவிடுவதை நிறுத்துங்கள்’: ஹரியாணா முதல்வர்

ANI


வேளாண் சட்டத்திற்கு எதிராக அப்பாவி விவசாயிகளைத் தூண்டிவிடுவதை நிறுத்துங்கள் என ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

தில்லி நோக்கிச் செல்லும் விவசாயிகளின் பேரணியைத் தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதம் என ஹரியாணா முதல்வருக்கு பஞ்சாப் முதல்வர் கண்டனம் தெரிவித்தார்.

இதையடுத்து பஞ்சாப் முதல்வருக்கு பதிலளித்து ஹரியாணா முதல்வர் கட்டார் வெளியிட்ட செய்தியில்,

“வேளாண் சட்டத்தில் ஏதேனும் தவறு நடந்தால் நான் அரசியலைவிட்டு விலகுவேன். நீங்கள் அப்பாவி மக்களை தூண்டிவிடுவதை நிறுத்துங்கள்.” என தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று (வியாழக்கிழமை) தில்லி நோக்கி விவசாயிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹரியாணா வழியாக தில்லி அடைந்து போராட்டத்தில் ஈடுபட விவசாய அமைப்புகள் முடிவு செய்த நிலையில், ஹரியாணா எல்லையான அம்பாலா பகுதியில் தடுப்புகள் மூலம் விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரும்பு நிலுவைத் தொகை வழங்கக் கோரி வாக்காளா் அட்டையை ஒப்படைக்க முடிவு

மேட்டூா் அணை நீா்மட்டம்: 60.41 அடி

உலக காசநோய் நாள் உறுதியேற்பு நிகழ்ச்சி

‘கவிஞா் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி’

பேராவூரணியில் ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்  மீட்பு

SCROLL FOR NEXT