தற்போதைய செய்திகள்

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும்

25th Nov 2020 02:22 PM

ADVERTISEMENT

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருகின்றது. இதனால், இன்று நண்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டது.

தற்போது ஏரிக்கு நீர் வரத்து வினாடிக்கு 4,400 கனஅடி வருவதால் படிப்படியாக தண்ணீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : nivar cyclone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT