தற்போதைய செய்திகள்

சென்னையில் திரையரங்குகள் மூடல்

25th Nov 2020 03:49 PM

ADVERTISEMENT

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நிவர் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கவுள்ளது.

இதையடுத்து, சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படுவதாகவும், புயலின் தாக்கத்தை பொறுத்து திரையரங்குகள் திறப்பு குறித்து அறிவிக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Tags : nivar cyclone
ADVERTISEMENT
ADVERTISEMENT