தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் 167 ஏரிகள் நிரம்பின

25th Nov 2020 02:43 PM

ADVERTISEMENT

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள 167 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.

நிவர் புயல் தாக்கத்தால் பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஏரிகள் நிரம்பி வருகின்றது. இதனால், அந்த மாவட்டங்களில் மொத்தமுள்ள 909 ஏரிகளில் 167 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

மேலும், 290 ஏரிகள் 75 சதவீதமும், 219 ஏரிகள் 50 சதவீதமும் மற்றும் 202 ஏரிகள் 25 சதவீதமும் கொள்ளளவை எட்டியுள்ளன.

Tags : lake
ADVERTISEMENT
ADVERTISEMENT