தற்போதைய செய்திகள்

அதி தீவிர புயலாக ‘நிவர்’ கரையைக் கடக்கும்

24th Nov 2020 03:34 PM

ADVERTISEMENT

நிவர் புயல் கரையைக் கடக்கும் போது அதி தீவிர புயலாக கடக்கும் என தெரிவித்துள்ளனர்.

நிவர் புயல் சென்னையில் இருந்து 430 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் நாளை மாலை கரையைக் கடக்கும் போது அதி தீவிர புயலாக மாறி 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் கடக்கும் என தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் பின்னா், ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இது, செவ்வாய்க்கிழமை காலை வலுவடைந்து புயலாக வலுவடைந்தது குறிப்பிடத்தக்கது.
 

Tags : nivar cyclone
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT