தற்போதைய செய்திகள்

8 மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

24th Nov 2020 12:39 PM

ADVERTISEMENT

நாட்டில் பல மாநிலங்களில் கரோனா 2ம் அலை ஏற்பட்டிருக்கும் சூழலில் பிரதமர் மோடி 8 மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றார்.

பண்டிகை காலத்தில் மக்கள் அதிகளவு பொது இடங்களில் கூடியதால் கேரளம், குஜராத், மேற்கு வங்கம், தில்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா ஆகிய 8 மாநிலங்களில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து உள்ளன.

இதையடுத்து மாநிலங்களின் கரோனா நிலவரம் குறித்து செவ்வாய்க்கிழமை அந்த மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  

ADVERTISEMENT

Tags : PM CM
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT