தற்போதைய செய்திகள்

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்புகளில் சேர்வதை எதிர்த்து முறையீடு : உயர்நீதிமன்றம் மறுப்பு

24th Nov 2020 01:42 PM

ADVERTISEMENT

சென்னை: மருத்துவப்படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்வதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட உள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து மனு தாக்கல் செய்துள்ளதாகவும்,
அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து கொள்ள  வேண்டும். எனவே கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்குரைஞர் ஒருவர் முறையிட்டார்.

அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இடையில் தலையிட்டு கலந்தாய்வை நிறுத்த முடியாது என மறுப்பு தெரிவித்தனர்.

மேலும் உரிய நடைமுறைகளை பின்பற்றி மனுவாக தாக்கல் செய்தால், தங்கள் முன் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் போது, விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

Tags : highcourt
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT