தற்போதைய செய்திகள்

பலத்த காற்று வீசினால் மின்விநியோகம் துண்டிக்கப்படும்: புதுவை அமைச்சர் கமலக்கண்ணன்

23rd Nov 2020 02:55 PM

ADVERTISEMENT

நிவர் புயல் கரையைக் கடக்கும்போது காற்று வேகமாக வீசினால் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காலை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி சென்னையிலிருந்து 590 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரிக்கு தென் கிழக்கே 550 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.  

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் நிவர் புயலாக மாறி வடமேற்கு திசையில் நகா்ந்து வரும் புதன்கிழமை (நவ.25) பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நிவர் புயல் கரையை கடக்கும் போது 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து, புயல் கரையைக் கடக்கும்போது 70 கி.மீ.க்கு மேல் காற்று வீசினால் பொது மக்களின் நலன் கருதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். 

Tags : cyclone
ADVERTISEMENT
ADVERTISEMENT