தற்போதைய செய்திகள்

கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கிய கடற்பன்றி

22nd Nov 2020 01:15 PM

ADVERTISEMENT

 

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில்  அரிய வகை உயிரினமான கடற்பன்றி ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது ஞாயிற்றுக்கிழமை (நவ.22) தெரிய வந்தது.

கோடியக்கரை கடற்கரையில் கடலில் மிதந்து இறந்த நிலைையில் சுமார் 4 அடி நீளமுள்ள கடற்பன்றி ஒன்று கரை ஒதுங்கியது.

ADVERTISEMENT

தகவல் அறிந்த வனத்துறை அலுவலர் சதீஸ் தலைமையிலான கோடியக்கரை வனத்துறையினர் இறந்த கடற்பன்றியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

கால்நடை மருத்துவக் குழுவினரைக்கொண்டு உடற்கூறு ஆய்வு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT