தற்போதைய செய்திகள்

கரோனா: உலக அளவில் பலி எண்ணிக்கை 13.86 லட்சத்தை தாண்டியது

22nd Nov 2020 08:50 AM

ADVERTISEMENT


வாஷிங்டன்: உலகளவில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 5.84 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை 13.86 லட்சத்தை தாண்டியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் தற்போதைய (நவ.22) நிலவரப்பபடி, 5 கோடியே 84 லட்சத்து 88 ஆயிரத்து 517 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் 4,04,64,774 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உலக முழுவதும் இதுவரை 13,86,334 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதித்தவர்களில் 1,66,37,409 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 1,02,396 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலக அளவில் கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,24,50,666     பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 47,85,029 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 22,927 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தொற்று பாதிப்புக்கு இதுவரை 261,790 பேர் பலியாகியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 90,50,597 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,32,726 ஆக உயர்ந்துள்ளது.

Tags : coronavirus Global Covid-19 cases
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT