தற்போதைய செய்திகள்

7.5% இடஒதுக்கீடு: கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது

20th Nov 2020 03:36 PM

ADVERTISEMENT

மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என மருத்துவக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மருத்துவக்கல்வி இயக்குநர் வெளியிட்ட சுற்றறிக்கையில்,

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களிடம் உடனடியாக கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது.

விதிமுறைகளின்படி சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு மாணவர்களை சேர்க்க வேண்டும். பின், முதல்வர் அறிவித்தபடி கல்வி உதவித் தொகை உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை, நேரு விளையாட்டரங்கில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : medical sheet
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT