தற்போதைய செய்திகள்

தாணேவில் டிச.31 வரை பள்ளிகள் திறப்பு இல்லை

20th Nov 2020 08:38 PM

ADVERTISEMENT

தாணே மாவட்டத்தில் கரோனா பரவல் குறையாத நிலையில் டிசம்பர் 31 வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் நர்வேகர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கரோனாவால் நாட்டிலேயே அதிக பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிரத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், பள்ளிகள் நவம்பர் 23 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தாணே மாவட்டத்தில் தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் 2ம் அலைக்கான அச்சம் உள்ளதால், பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் டிசம்பர் 31ஆம் தேதி வரை இணையவழிக் கல்வி தொடரும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

ADVERTISEMENT

 

Tags : Thane
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT