தற்போதைய செய்திகள்

'நமது பாதுகாப்புப் படை துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளது’: மோடி

20th Nov 2020 04:15 PM

ADVERTISEMENT

நமது எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீண்டும் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளனர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நக்ரோட்டா பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணியளவில் லாரியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கிடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து 11 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. இச்சம்பவத்தில் 2 காவலர்கள் காயமடைந்தனர்.

அவர்கள் மும்பை தாக்குதல் போன்ற ஒரு பெரிய தாக்குதல் சம்பவம் நிகழ்த்த வந்துள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் ஆகியோருடன் பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட சுட்டுரை செய்தியில்,

ADVERTISEMENT

“பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 4 பயங்கரவாதிகள் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் தாக்குதல் நடந்த வந்தார்கள். அவர்களின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.

நமது பாதுகாப்புப் படைகள் மீண்டும் மிகுந்த துணிச்சலையும் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரை குறிவைத்து ஜனநாயகத்தை சீர்குலைக்கும் சதியை அவர்கள் தோற்கடித்துள்ளனர், அவர்களின் விழிப்புணர்வுக்கு நன்றி. ” என தெரிவித்துள்ளார்.

Tags : modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT