கேரள தங்கக் கடத்தல் வழக்குத் தொடர்பாக ஐந்து இடங்களில் தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகம் வழியாக 15 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டபோது பிடிபட்டது. இந்த வழக்கில், தூதரகத்தின் முன்னாள் ஊழியரும், முதல்வா் அலுவலகத்தில் பணியாற்றி வந்தவருமான ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்.சரித் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த விவகாரத்தில் முதல்வா் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலரும் ஐஏஎஸ் அதிகாரியுமான எம்.சிவசங்கருக்குத் தொடா்பு இருப்பதாகக் கூறி கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் உள்ள 5 இடங்களில் தங்கக் கடத்தல் வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனர்.
மேலும் இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல் வெளியிடவில்லை.