தில்லியில் வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா பாதிப்பு 3-ம் அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதனால், கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது. எனினும், 3-ம் அலையின் உச்சத்தைக் கரோனா கடந்துவிட்டதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து, தில்லி முழுவதும் வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரப் பணியாளர் ஒருவர் கூறுகையில்,
வீடு வீடாகச் சென்று சோதனை செய்யும் போது யாரேனும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தால், நாங்கள் அவர்களை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றோம் எனத் தெரிவித்தார்.