தற்போதைய செய்திகள்

குஜராத்தின் 4 நகரங்களில் முழு ஊரடங்கு

20th Nov 2020 07:40 PM

ADVERTISEMENT

குஜராத் மாநிலம் ஆமதாபாத், ராஜ்கோட், சூரட் மற்றும் வதோரா நகரில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், நவம்பர் 21 முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் பொதுமுடக்கத்தை அறிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் பொதுமுடக்கத்தை அரசு திணிக்காது என முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்த நிலையில் சில நகரங்களுக்கு மட்டும் வார இறுதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்தில் வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணிவரை அமலில் இருக்கும் என முன்பே அறிவித்தனர்.

இந்நிலையில் துணை முதல்வர் நிதின் பட்டேல் வெளியிட்ட செய்தியில்,

ADVERTISEMENT

ராஜ்கோட், சூரட் மற்றும் வதோரா நகரில் நவம்பர் 21 (சனிக்கிழமை) இரவு 9 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்கு அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

முழு ஊரடங்கை மீறி முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வருபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் ரூபானி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Curfew
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT