தற்போதைய செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்

20th Nov 2020 06:54 PM

ADVERTISEMENT

சென்னை விமான நிலையத்தில் 4 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சுங்கத்துறை வெளியிட்ட செய்தியில்,

துபையில் இருந்து நவம்பர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணித்த 6 பயணிகளை சோதனை செய்ததில் ரூ. 2.06 கோடி மதிப்பிலான 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

கடத்தல் தங்கங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 6 பேரைக் கைது செய்து விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

Tags : Gold Seized
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT