தற்போதைய செய்திகள்

‘உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னை பயங்கரவாதம்’: மோடி

17th Nov 2020 05:55 PM

ADVERTISEMENT

12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இன்றூ(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

ரஷியா அதிபர் புடின் அழைப்பின் பேரில், இன்று காணொளி மூலம் நடைபெற்ற  12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

பிரிக்ஸ் மாநாட்டில் மோடி பேசுகையில்,

உலகம் தற்போது எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னையாக பயங்கரவாதம் உள்ளது. இந்தப் பிரச்னையை உரிய முறையில் கையாள பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை பொறுப்பேற்க செய்யவேண்டும் என கூறினார்.

ADVERTISEMENT

மேலும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும் பிரதமர் மோடி பேசினார்.

காணொளி முறையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பிரேசில் அதிபர் பொல்சனரோ ஆகியோர் பங்கேற்றனர்.

Tags : modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT