தற்போதைய செய்திகள்

‘தில்லியில் 3வது அலை குறையத் தொடங்கியது’: சுகாதாரத் துறை அமைச்சர்

17th Nov 2020 11:14 AM

ADVERTISEMENT

தில்லியில் கரோனா பரவலின் மூன்றாம் அலை உச்சத்தை தொட்டுவிட்டு தற்போது குறையத் தொடங்கிவிட்டதாக சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இதுகுறித்து ஜெயின் கூறுகையில்,

“தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் கடந்த வாரம் 15.33 சதவீதத்திலிருந்து தற்போது 13 சதவீதமாக குறையத் தொடங்கியுள்ளது. மூன்றாம் அலையானது தற்போது உச்சத்தைத் தொட்டு குறையத் தொடங்கியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைப் பெற 16,500 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதில் 8,000 படுக்கைகள் காலியாக உள்ளன.

வெளி மாநிலங்களில் இருந்து வரும் நோயாளிகள் தில்லி முகவரியைப் பயன்படுத்தி கிட்டத்திட்ட 25-30 சதவீதம் பேர் பரிசோதனை செய்து வருகிறார்கள். சோதனை செய்துகொள்ள மறுக்க இயலாததால், பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT