தற்போதைய செய்திகள்

பஞ்சாப்: கார் விபத்தில் மருத்துவர் உள்பட 5 பேர் பலி

17th Nov 2020 02:47 PM

ADVERTISEMENT

பஞ்சாபில் டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி மீது கார் மோதியதில் மருத்துவர் உள்பட 5 பேர் பலியானதாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறை தரப்பில் கூறியதாவது:

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மோகா நகருக்கு காரில் மருத்துவர் உள்பட 5 பேர் சென்றுள்ளனர். சங்ரூர்-சுனம் சாலையில் திங்கள்கிழமை இரவு கார் சென்று கொண்டிருந்த போது டீசல் டேங்கர் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், லாரியில் இருந்த டீசல் கார் மீது கொட்டியதால், கார் தீப்பற்றி எரிந்தது. காரின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் அவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை. இதனால் காரில் பயணம் செய்த 5 பேரும் உடல் கருகி பலியாகினர்.” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

 

Tags : punjab
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT