தற்போதைய செய்திகள்

ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அமித்ஷா

17th Nov 2020 09:00 PM

ADVERTISEMENT

சென்னையில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.67,378 மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்ட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.61843 மதிப்பிலான 2ஆம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம், கரூர் நஞ்சை புகலூரில் ரூ.406 கோடி மதிப்பிலான காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம்,  கோவை-அவிநாசி சாலையில் ரூ.1,620 கோடி மதிப்பிலான உயர்மட்ட சாலை திட்டம் ஆகியவற்றிக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்ட உள்ளார்.

Tags : Amit shah
ADVERTISEMENT
ADVERTISEMENT