தற்போதைய செய்திகள்

பாஜகவிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் விலகல்

17th Nov 2020 02:00 PM

ADVERTISEMENT

முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான ஜெய்சிங்ராவ் கெய்க்வாட் பாட்டீல் செவ்வாய்க்கிழமை கட்சியிலிருந்து விலகினார்.

மகாராஷ்டிரத்தின் பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீலுக்கு அவர் தனது ராஜிநாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை காலை அனுப்பினார்.

ராஜிநாமா கடிதத்தில் ஜெய்சிங்ராவ் கூறியதாவது:

"10 ஆண்டுகளுக்கும் மேலாகக் கட்சித் தலைமை என்னை தொடர்ந்து புறக்கணித்ததில் நான் வருத்தத்தில் உள்ளேன். எனவே நான் கட்சியில் இருந்து ராஜிநாமா செய்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் மாநில பாஜக பிரிவில் இருந்தும், கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் கூறினார். 

ஜெய்சிங்ராவ் மத்திய மற்றும் மாநில அமைச்சரவைகளில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
 

Tags : bjp
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT