தற்போதைய செய்திகள்

பிகார் சட்டப்பேரவை நவ.23-ல் கூடுகிறது

17th Nov 2020 01:08 PM

ADVERTISEMENT

பிகாரின் சட்டப்பேரவைக் கூட்டம் நவம்பர் 23 முதல் 27 வரை நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

பிகார் மாநிலத்தின் அமைச்சரவை திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்ட நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிகார் மாநில அரசின் சட்டப்பேரவைக் கூட்டம் நவம்பர் 23 முதல் 27 வரை நடக்கும் என அறிவித்துள்ளனர்.

பிகாா் சட்டப் பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 இடங்களில் 125-ஐ அக்கூட்டணி கைப்பற்றியது. அதில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

முதல்வா் நிதீஷ் குமாருடன் 2 துணை முதல்வா்கள் உள்ளிட்ட 14 போ் அமைச்சா்களாக திங்கள்கிழமை பதவியேற்றனா். புதிய அமைச்சா்களில் 7 போ் பாஜகவைச் சோ்ந்தவா்கள் ஆவா். ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் 5 பேரும், ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் கட்சிகள் சாா்பில் தலா ஒருவரும் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT