தற்போதைய செய்திகள்

துணைத் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு 11ஆம் வகுப்பு சேர்க்கை: பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

17th Nov 2020 08:28 PM

ADVERTISEMENT

10ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு 11ஆம் வகுப்பில் சேர்க்கை வழங்க வேண்டும் என பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

2019-20 கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியுற்றவர்கள், கரோனா காலத்தில் நடத்தப்பட்ட தேர்வை எழுத முடியாதவர்களுக்கு சமீபத்தில் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து 10, 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி வெளியிடப்பட்டன. 

10ஆம் வகுப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11ஆம் வகுப்பு சேர்க்கை மறுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 11ஆம் வகுப்பு சேர்க்கையை மறுக்காமல் வழங்க வேண்டும் என பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : TN Education
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT