தற்போதைய செய்திகள்

மிரட்டல்களுக்கு நான் பணியாததே காரணம்: சூரப்பா

13th Nov 2020 03:18 PM

ADVERTISEMENT

மிரட்டல்கள், அழுத்தங்களுக்கு நான் பணியாததால் அவதூறான புகார்களை முன் வைக்கின்றார்கள் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

பேராசிரியர்கள் பணி நியமனத்தில் முறைக்கேடு நடந்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, புகாரை விசாரிக்க தமிழக அரசுத் தரப்பில் வெள்ளிக்கிழமை காலை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

இதுகுறித்து சூரப்பா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

மிரட்டல்கள், அழுத்தங்களுக்கு நான் பணியாததால் அவதூறான புகார்களை முன் வைக்கின்றார்கள். நான் ஒரு பைசா கூட லஞ்சமாக பெறவில்லை. எனது வங்கிக் கணக்கை யார் வேண்டுமானாலும் சரி பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

Tags : Anna University Vice Chancellor
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT