தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி கொடுத்து தீபாவளி கொண்டாடிய சமூக ஆர்வலர்

13th Nov 2020 08:20 PM

ADVERTISEMENT

சூலூர்: தீபாவளிக்கு மாற்றுத்திறனாளிக்கு சக்கர நாற்காலி கொடுத்து தீபாவளியை கொண்டாடிய சமூக ஆர்வலரை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மணி (வயது 43) என்பவர் மிகவும் வறுமையான சூழலில் வாழ்ந்து வந்தார். அவருக்கு இருசக்கர சக்கர நாற்காலி வாகனம் தேவை என அப்பகுதியினர் சூலூர் தோழியர் அமைப்பினரை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து அந்த அமைப்பின் நிர்வாகியான வெற்றிச்செல்வி தீபாவளியைக் கொண்டாடும் விதமாக மாற்றுத்திறனாளி மணிக்கு சக்கர நாற்காலியை வழங்கிக் கொடுத்தார்.

இதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, “கரோனா தொற்றுநோய் காலத்தில் பொதுமக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருக்கின்றனர், ஆகவே இந்த ஆண்டு பட்டாசு வாங்காமல் மாற்றுத்திறனாளிக்கு என்னால் இயன்ற உதவியை செய்தேன்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

இச்செயலை அப்பகுதியினர் வெகுவாகப் பாராட்டினர்.

 

Tags : coimbatore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT