தற்போதைய செய்திகள்

பட்டாசுக் கடைகளில் விற்பனை மந்தம்: வியாபாரிகள் வேதனை

13th Nov 2020 09:27 PM

ADVERTISEMENT

சூலூர்: சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு விற்பனை மந்த நிலையில் இருப்பதாக வியாபாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

சூலூரில் வருடாவருடம் பட்டாசு விற்பனை செய்ய 80க்கும் மேற்பட்டோர் கடைகள் அமைத்து வியாபாரம் செய்வர். ஆனால் இந்த வருடம் 30க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே பட்டாசு கடைகள் விண்ணப்பிக்கப்பட்டு தற்காலிக மற்றும் நிரந்தர உரிமம் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு இரண்டு நாட்களின் முன்பான வியாழக்கிழமை சொற்ப எண்ணிக்கையிலேயே வாடிக்கையாளர்கள் வந்ததாகவும் தீபாவளிக்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை வாடிக்கையாளர் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளதாகவும், விற்பனை மந்த நிலையில் உள்ளதாக பட்டாசு கடை வியாபாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை விற்பனை ஓரளவு எதிர்பார்ப்பதாகவும், ஆனால் இந்த வருடம் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் இருக்கும் என தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதனிடையே சூலூர் தீயணைப்பு படை சார்பில் நிலைய அலுவலர் கோபால் பட்டாசு கடைகளில் விதிமீறல் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார்.

Tags : coimbatore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT