தற்போதைய செய்திகள்

குவைத் மாணவர்களுக்கு ஆன்லைனில் மட்டுமே தேர்வு

13th Nov 2020 04:55 PM

ADVERTISEMENT

குவைத் நாட்டில் கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை மாணவர்களுக்கு இணையவழியில் மட்டுமே தேர்வு நடத்த வேண்டும் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

குவைத் நாட்டின் கல்வித்துறை மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்காக சுகாராத்துறையிடம் கோரிக்கை விடுத்தது.

அந்தக் கோரிக்கையை நிராகரித்து கரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் இணையவழி மூலமாக மட்டும்தான் தேர்வு வைக்க வேண்டும் என சுகாதாரத் துறையின் துணை செயலாளர் டாக்டர் முஸ்தபா ரெடா தெரிவித்தார்.

குவைத் நாட்டில் இதுவரை 1,34,932 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 830 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Kuwait
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT