தற்போதைய செய்திகள்

பட்ஜெட் 2021-22: ஆலோசனை வழங்க மக்களுக்கு அழைப்பு

13th Nov 2020 07:50 PM

ADVERTISEMENT

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22 தொடர்பான ஆலோசனை வழங்க மக்களுக்கு நிதியமைச்சகம் வெள்ளிக்கிழமை அழைப்பு விடுத்துள்ளது.

நிதிநிலை அறிக்கை தொடர்பாக ஆண்டுதோறும் பல்வேறு தரப்பினரிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருகின்றது. இந்நிலையில், கரோனா தொற்றை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை குறித்த நிறுவனம் மற்றும் வல்லுநர்களின் ஆலோசனையை பெற பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கியுள்ளனர்.

இதன்மூலம், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நிதி நிலை அறிக்கை 2021-22 குறித்த பொதுமக்களின் கருத்தை mygov.in மூலம் நவம்பர் 15 முதல் நவம்பார் 30 வரை தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT

மக்கள் தெரிவிக்கும் கருத்துகள் அமைச்சக அதிகாரிகளால் பரிசீலிக்கப்படும் என நிதியாமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags : ministry of finance
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT