தற்போதைய செய்திகள்

தில்லியில் துப்பாக்கியால் சுட்டு ஒருவர் தற்கொலை

11th Nov 2020 04:35 PM

ADVERTISEMENT

தில்லியின் துவாரகாவின் சாவ்லா பகுதியில் புதன்கிழமை ஒருவர் தனது காருக்குள் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து துவாரகா துணை காவல் ஆணையர் ராஜேந்திர பிரசாத் மீனா கூறியதாவது,

“உஜ்வா கிராமத்தைச் சேர்ந்த ரவீந்தர் காரில் சாவ்லா பகுதிக்கு வந்துள்ளார். பின், அவர் வைத்திருந்த துப்பாக்கியால் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

அந்த கார் இறந்தவரின் தந்தை பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இறந்தவரின் உடல் அருகில் ஒரு துப்பாக்கி இருந்தது.

ADVERTISEMENT

இது தற்கொலை போல் தெரிகிறது. மேலும் இறந்தவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.” என தெரிவித்தார்.

 

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT