தற்போதைய செய்திகள்

‘அனுமதி பெறுவதற்கு முன் வேல் யாத்திரை சென்றது ஏன்?’ : உயர்நீதிமன்றம் கேள்வி

10th Nov 2020 04:35 PM

ADVERTISEMENT

பாஜகவின் வேல்யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத நிகழ்ச்சியில் 100 பேர் வரை அனுமதிக்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் கரு.நாகராஜன் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது,

“பாஜகவின் வேல்யாத்திரையில் தலையிடக்கூடாது என தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட முடியாது என தெரிவித்தது.

ADVERTISEMENT

மேலும், வேல் ஒரு ஆயுதம், ஆயுத சட்டப்படி அது தடை செய்யப்பட்டது. அனுமதி அளிக்காத நிலையில் எப்படி வேல் யாத்திரை செல்ல முடியும்?, அனுமதி பெறும் வரை பொறுத்திருக்காமல் வேல் யாத்திரை நடத்தப்பட்டது ஏன்?” என பாஜக தரப்பினரிடம் சரமாரியான கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.

இவ்வழக்கில் தமிழக அரசுத் தரப்பில், கோவில்களில் வழிபாடு நடத்த அனுமதி வழங்கியபோதும், நவம்பர் 30 வரை யாத்திரை செல்லத்தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கை டிசம்பர் 2ஆம் தேதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டது.

மேலும், காவல்துறையின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடர பாஜகவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

 

Tags : chennai high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT